நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலு சிலாங்கூரில் 324  தமிழ்ப்பள்ளி  மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம்: மந்திரி புசார் வழங்கினார்

பத்தாங்காலி -

உலு சிலாங்கூரில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 324 மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் இலவச பேருந்து கட்டணமாக வழங்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு ஆகியோர் மாணவர்களுக்கு இந்த பற்று சீட்டுகளை எடுத்து வழங்கினர்.

பத்தாங்காலி சமூக மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு நேரடியாக இந்த பற்று சீட்டுகள் வழங்கப்பட்டது.

பத்தாங்காலி தமிழ்ப்பள்ளியைப் சேர்ந்த 32 மாணவர்கள், சங்காட் ஆசா தமிழ்ப் பள்ளியை சேர்ந்த 27  மாணவர்கள், எஸ்கோட் தமிழ்ப் பள்ளியை சேர்ந்த 28 மாணவர்கள், கோல குபு பாரு தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த  30 மாணவர்கள், கெர்லிங் தமிழ்ப் பள்ளியைப் சேர்ந்த 60 மாணவர்கள், களும்பாங் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 62 மாணவர்கள், லீமா பெலாஸ் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள், சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த  50 மாணவர்கள்,  புக்கிட் பெருந்தோங் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள் என அனைவருக்கும் தலா 300 வெள்ளி பற்றுச் சீட்டுகளை பெற்றுக் கொண்டனர்.

ஆக மொத்தம் 324  மாணவர்களுக்கு 97 ஆயிரத்து 200 வெள்ளி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset