நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் பெண் திட்டத்திற்கான முகப்பிடம்; இந்திய பெண்கள் பயன் பெற வேண்டும்: டத்தோ ரமணன்

கோல குபு பாரு:

கோல குபு பாருவில் அமானா இக்தியாரின் பெண் திட்டத்திற்கான முகப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள இந்திய பெண்கள் இதன் வாயிலாக  பயன்  பெற வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.

இந்திய சமுதாய மக்களை சந்திக்கும் நோக்கில் மித்ரா சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

மித்ரா தவிர்த்து அமானா இக்தியார், தெக்குன், சொச்சோ உட்பட பல முகப்பிடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமானா இக்தியாரின் பெண் திட்டத்திற்கான முகப்பிடமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக இந்திய பெண்களுக்கு உதவும் வகையில் கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

சொந்தமாக தொழில் தொடங்கவிரும்பும் இந்திய பெண்களுக்கு இத்திட்டத்தின் வாயிலாக கடனுதவி வழங்கப்படுகிறது.

ஆகவே இந்த வாய்ப்பை உலு சிலாங்கூரில் உள்ள இந்திய பெண்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset