நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீர் மற்றும் அவரின் இரு மகன்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது: அசாம் பாக்கி

குவா முசாங்: 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி தற்போது முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது விசாரணை நடத்தி வருவதாக ஒப்புக் கொண்டுள்ளது.

விசாரணை தீவிரமாக நடந்து வந்தப் போதிலும், அது குறித்த தெளிவான தகவல்களைத் தற்போது வழங்க முடியவில்லை என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாசம் பாக்கி தெரிவித்தார். 

இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டவர்களில் முன்னாள் பிரதமர் மகாதீரும் ஒருவர் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். 

அவருக்கு எதிரான விசாரணையின் விளைவாக, அவரது இரண்டு மகன்களும் விசாரணை செய்யப்படுகின்றது.

இதற்காக அவரது இரு மகன்களுக்கும் தங்கள் சொத்து விபரங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் அறிவிக்க எம்ஏசிசி நோட்டீஸ் அனுப்பியது. 

பிரிவு 36 ஊழல் எதிர்ப்பு ஆணையச் சட்டம் 2009 இன் கீழ் இந்த வழக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

அவர்கள் என்ன தவறு செய்தார்கள் மற்றும் துன் எம் மீது குற்றம் சாட்டப்பட்டது பற்றிய விவரங்களத் தன்னால் தற்போது கூற முடியாது என்று அவர் கூறினார்.

முன்னதாக, முன்னாள் பிரதமருக்கு எதிரான விசாரணையில் உதவுமாறு துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் இரண்டு மகன்களின் குற்றச்சாட்டுகள் குறித்து எம்ஏசிசி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்தன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset