நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு தேர்தலை  மஇகா புறக்கணிக்கிறது என்பதும் பொய்யாகி விட்டது: டத்தோ ரமணன் சாடல்

கோல குபு பாரு -

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலை  மஇகா புறக்கணிக்கிறது என்பதும் பொய்யாகி விட்டது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் இதனை கூறினார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்தாலும் எதிர்கட்சிகளும் ஒரு சில தரப்பினரும் தொடர்ந்து பொய்களைச் சொல்லி மக்களை குழப்பி வருகின்றனர்.

குறிப்பாக மூன்று நாட்களுக்கு முன் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மஇகா இந்த கோல குபு பாரு தேர்தலைப் புறக்கணிக்கிறது என எதிர்கட்சிகள் கூறினார்.

ஆனால் அக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனும் இங்கு மஇகா தேர்தல் கேந்திரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் ஜசெகவைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர். இது தான் ஒற்றுமை அரசாங்கத்தின் வலுவாகும்.

இந்த நிகழ்வின் மூலம் எதிர்கட்சிகள் பொய் தான் கூறுகிறார்கள் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

ஆகவே பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் எதிர்க்கட்சிகளின் பொய்கள் கோல குபு பாரு வாக்காளர்கள் குறிப்பாக இந்திய சமுதாயத்திடம் எடுப்படாது.

கோல குபு பாருவில் நடைபெற்ற மித்ராவின் இந்திய மக்களுடனான சந்திப்புக்கு பின் டத்தோ ரமணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset