நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிநாட்டு பேச்சாளராக அழைத்து வரப்பட்ட பேராசிரியர் விவகாரம்; மன்னிப்பு கோரியது மலாயாப் பல்கலைக்கழகம் 

கோலாலம்பூர்: 

இஸ்ரேல் நிலைப்பாடு ஆதரவு கொண்ட வெளிநாட்டு பேராசிரியர் ஒருவரை பேச அழைத்த விவகாரம் தொடர்பில் மலேசியாவின் முன்னணி பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் மலாயாப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

வெளிநாட்டு பேச்சாளர் விவகாரம் தொடர்பாக மலாயாப் பல்கலைக்கழகம் தமது வருத்தத்தையும் இங்கு தெரிவித்துக்கொள்வதாக ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. 

மலேசிய அரசாங்கத்தின் கொள்கைகளும் இறையாண்மையையும் மலாயாப் பல்கலைக்கழகம் என்றும் மதிப்பதோடு இனிமேல் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தும் என்று அது கூறியது

முன்னதாக, இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் BRUCE GILLEY யின் கருத்தரங்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த நிலையில் அது அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. 

இந்த சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மலேசிய உயர்க்கல்வி துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset