நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சனிக்கிழமை வரை பாசிர் மாஸில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

பெட்டாலிங் ஜெயா:

பாசிர் மாஸ் உட்பட கிளந்தானிலுள்ள ஏழு மாவட்டங்கள் இந்தச் சனிக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அதிகபட்ச தினசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி, குவா முசாங், ஜெலி, குவாலா க்ராய், பாசிர் பூத்தே, தனா மேரா மற்றும் கோத்தா பாரு ஆகிய ஆறு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலையான 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என்று மெட்மலேசியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக, மூன்று நாட்களுக்கு பெசுட், செத்தியூ, பகாங்கிலுள்ள ரவுப் திரெங்கானுவிலும் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டும் என்ற எச்சரிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, வடக்குப் பகுதியில் கெடாவிலும் அதே வெப்பமான வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset