நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2023 மித்ராவுக்கு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது

கோலாலம்பூர்:

கடந்த 2023ஆம் ஆண்டும் மித்ராவுக்கு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.

ஆய்வாளர் டெனிசன் ஜெயசூர்யா எழுதியிருக்கும் மித்ராவின் கடந்த, நடப்பு, எதிர்காலம் எனும் நூலின் பக்கம் 87 முதல் 89ஆம் பக்கங்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டில் செடிக் என ஆரம்பிக்கப்பட்டது தற்போது மித்ராவாக மாற்றம் கண்டுள்ளது.

இதில் கடந்த 2023ஆம் ஆண்டும் ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் நிதி முழுமையாக சமுதாயத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.

அப்போது மித்ரா நடவடிக்கை குழு தலைவராக இருந்த டத்தோ ஆர். ரமணனின் அறிவிப்புகள், ஊடக செய்திகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளாக அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 100 மில்லியன் ரிங்கிட்டின் 100 சதவீத நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக நிதி முறைகேடுகளில் குறைந்த ஆபத்தை கடந்தாண்டு மித்ரா கொண்டிருந்தது என்று எம்ஏசிசி அதிகாரப்பூர்வ மதிப்பீட்டையும் வழங்கியது.

மித்ரா அகப்பக்கத்தில் கடந்த 2022, 2023ஆம் ஆண்டில் நல்ல தகவல்கள் உள்ளன.

மானியங்கள் பெற்ற இயக்கங்கள், நிறுவனங்கள் உட்பட அனைத்து விவரங்களும் அகப்பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல முயற்சி. பாராட்டுக்குரியது எனவும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

செடிக் முதல் முந்தைய ஆண்டை விட 2023 மித்ராவுக்கு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.

இது ஒரு மூன்றாம் தரப்பினரால் பதிவு செய்யப்பட்டது 

குறிப்பாக ஓர் சிறந்த விமர்சகர்களில் ஒருவரால் வெளியிடப்பட்ட புத்தகம் இதுவாகும்.

ஆக 2023ல் மித்ரா செயல்படவில்லை என யாரும் இனி கூற முடியாது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset