நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MYJalan செயலியின் மூலம் சேதமடைந்த சாலைகள் குறித்து மொத்தம் 14,031 புகார்கள் பெறப்பட்டுள்ளன: ஹம்மத் மஸ்லான்

கோலாலம்பூர்: 

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இவ்வாண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் MYJalan செயலியின் மூலம் சேதமடைந்த சாலைகள் குறித்து மொத்தம் 14,031 புகார்களைப் பொதுப் பணித்துறை அமைச்சகம் பெற்றுள்ளது.

அந்த எண்ணிக்கையில், 27 விழுக்காடு அல்லது 3,776 புகார்கள் பொதுப்பணித் துறையின் மேற்பார்வையில் சம்பந்தப்பட்டதாகவும், 73 விழுக்காடு அல்லது 10,255 புகார்கள் மற்ற அமைச்சகங்களின் பொறுப்பில் இருப்பதாகவும் அதன் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அஹம்மத் மஸ்லான் கூறினார்.

இருப்பினும், கூட்டரசு சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளைப் பராமறிப்பதற்கு தங்கள் தரப்பு பொறுப்பேற்கும் என்றார். 

சம்பந்தப்பட்ட தகவல்களை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சகங்களுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.

இதுவரை தனது அமைச்சகம் சாலை தொடர்பான விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட 3,766 புகார்களில் 86 விழுக்காட்டைத் தனது தரப்பு தீர்த்துவிட்டதாகவும், மீதமுள்ளவை இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அஹம்மத் கூறினார்.

நெடுஞ்சாலை மற்றும் கூட்டரசு சாலைகளில் குழிகள் இருந்தால், அதை 24 மணி நேரத்திற்குள் சரிசெய்ய வேண்டும். 

இதுவரை, தனது தரப்பு  100 சதவீதத்தை 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கும் குறைவாக நேரத்தில் சரி செய்துள்ளது என்று அவர் கூறினார்.

MYJalan செயலி என்பது சாலைப் பயனர்கள் சாலை சேதம் தொடர்பான புகார்களை எளிதாகச் செய்வதற்கான ஒரு திட்டமாகும். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset