நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலிங்கில் புயல் காற்றால் 21 வீடுகள் சேதமடைந்தன

பாலிங்:

பாலிங் மாவட்டத்திலுள்ள முக்கிம் சியோங், தாவார், பாகாய், முக்கிம் தெலோய் கானான் ஆகியப் பகுதிகளில் புயல் காற்றால்  21 வீடுகள் சேதமடைந்தன.

பொது தற்காப்பு துறைக்கு நேற்று மாலை 6 மணியளவில் பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்ததாகவும், மொத்தம் 15 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் பாலிங் மாவட்டப் பொது தற்காப்பு துறை அதிகாரி முஹம்மத் ஃபைசோல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார். 

இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது.

இருப்பினும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாகக் கூறினார்.

போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்த மரங்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் வீடுகளில் விழுந்த மரங்களைத் தனது தரப்பு அகற்றியுள்ளதையும் அவர் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் பணியும் விழுந்த மரங்களை வெட்டும் பணியும் இன்றும் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தமாரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset