நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் பிள்ளைகளுக்கான பொதுப் பல்கலைக்கழக கல்விக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்: ஸம்ரி அப்துல் காடீர்

கோலாலம்பூர்:

கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை உயர்கல்வி அமைச்சகம் தள்ளுபடி செய்யும் என்று உயர்க்கல்வி அமைச்சர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார். 

இந்த முன்மொழிவுக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளதையும் ஸம்ரி குறிப்பிட்டார். 

தற்போது மலேசியா கிளந்தான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கடற்படை அதிகாரி முஹம்மத் ஷாரிசான் முஹம்மத் தெர்மிசியின் மகளின் கல்விக் கட்டணத்தை உயர்க்கல்வி அமைச்சு தள்ளுபடி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பாதிக்கப்பட்டவர்களின் மற்ற பிள்ளைகளும் பொது பல்கலைகழகங்களில் கல்வி பயின்று வந்தால் அவர்களின் கல்வி கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும். 

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் காணப்பட்ட 21 பிள்ளைகளுக்குத் தேசிய கல்வி சேமிப்புத் திட்டம் (SSPN-i) கணக்கு வடிவில் நன்கொடைகளை வழங்கப்படும் என்றார் அவர். 

இந்த முயற்சிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட அனைவரின் குழந்தைகளும் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்வதாகவும், குழந்தைகள் சிக்கலின்றி கல்வியைத் தொடர வேண்டும் என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset