நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடுமையான அமலாக்கம் இல்லாததால் உணவுக் கடைகளில் இன்னும் சிகரெட் புகைப்படுகின்றது: பி.ப. சங்கம் குற்றச்சாட்டு

பினாங்கு: 

அமலாக்கத்தின் பலவீனத்தால் புகை பிடிக்கக்கூடாத இடங்களில் இன்னும் பலர் மிக தைரியமாக சிகரெட் மற்றும் வேப் போன்றவற்றை புகைத்து வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதுவும் உணவுக்கடைகளில் புகைக்ககூடாது என்ற ஒரு விதி இருந்தாலும் இன்னும் பலர் அந்த விதியை மீறி வருவதாக பி.ப.சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

உணவுக் கடைகளில் புகைக்க கூடாது என்ற வாசகம் சிகப்பு எழுத்துக்களில் ஒட்டப்பட்டிருந்தாலும் இன்னும் சிகரெட் மற்றும் வேப் புகைப்பாளர்கள் அதனை பொருட் படுத்தாமல் அலட்சியபடுத்தி உணவுக் கடைகளில் புகைத்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் அமலாக்கம் இல்லாததுதான் என்றார் சுப்பாராவ்.

உணவுக்கடை நடத்துனர்கள் சிகரெட் புகைப்பவர்களிடம் சென்று கடையின் உள்ளே புகைக்கக் கூடாது என்று எடுத்துச் சொன்னால், சிலர் கடைகாரர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுத்து வெளியே சென்றுவிடுகின்றார்கள்.

ஆனால் வேறு சிலர் அலட்சியமாக சிகரெட் புகைப்பதை நியாயப்படுத்தி கடைக்காரர்களிடம் தகராறு செய்கின்றனர் என்றார் அவர்.

இப்படிப்பட்ட பிரச்சினைகள் வேண்டாம் என்பதற்காக, சில கடை முதலாளிகள் புகைப்பவர்களிடம் ஆலோசனை சொல்வதில்லை. இதனால் மற்ற பிரச்சினைகள் எழும் என்பதால் கடை முதலாளிகள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து விடுகின்றனர்.

ஒருவராக இருந்தால் கடைக்காரர் சொல்வதை கேட்பார். ஆனால் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் நிச்சயம் வாக்குவாதம் ஏற்படலாம் என்றார் சுப்பாராவ்.

ஆகவே அதிகமான அமலாக்க பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உணவுக்கடைகள் மற்றும் புகை பிடிக்கக்கூடாத இடங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டும்.

மேலும் விதியை மீறுகின்றவர்களுக்கு அபராத தொகையை மும்மடங்காக அதிகரிக்க வேண்டும்.

மேலும் புகைபிடிக்காதவர்கள், தங்களுக்கு அருகில் யவராவது  சிகரெட் அல்லது வேப் புகைத்தால், அவர்களிடம் சென்று புகைக்க வேண்டாம் என சொல்ல வேண்டும். தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

உணவுக்கடைகளில் பலதரப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் வருகின்றார்கள். அவர்களது ஆரோக்கியமும் மிக முக்கியம்.

மேலும் புகைப்பதால் ஏற்படும் உடற் பாதிப்புக்களை அடங்கிய புகைப்படங்களை சுகாதார அமைச்சு பொது இடங்களில் குறிப்பாக உணவு கடைகளில் ஒட்ட வேண்டும்
 என்றும் பசுப்பாராவ் ஆலோசனை கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset