நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

24 மணி நேர உணவகங்களை வைத்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மலிவு விலை விளம்பரம் தேடக் கூடாது: பிரிமாஸ்

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள  24 மணி நேர உணவகங்களை வைத்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 
மலிவு விலை விளம்பரம் தேடக் கூடாது.

பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜே. சுரேஷ் இவ்வாறு சாடினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மொஹிதீன் அப்துல் காதர், 24 மணி நேர உணவகங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதில்  மலேசியர்கள் பருமனாக இருப்பதற்கு உணவு மட்டும் காரணம் என்ற அவரின் கூற்று அபத்தமானது.

உடல் பருமனத்திற்கு உணவு மட்டும்  காரணம் அல்ல. வேறு பல காரணங்கள் உள்ளன.

மலேசியாவிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இங்குள்ள பாரம்பரிய கலாச்சார உணவுகளும் ஓர் காரணம் என்பதை பயனீட்டாளர் சங்கம் புரிந்து கொள்ளவில்லை. 

சுற்றுப் பயணிகளின் வருகை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.

இதேபோல் பல மாநிலங்களில் 24 மணி நேரம் இயங்கும் பல தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு வேலை செய்பவர்கள் உணவுக்காக 24 மணி நேர உணவகங்களுக்கு தான் செல்ல வேண்டும்.

உணவகங்கள் மூடப்பட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

மக்கள் தங்கள் எடையைக் குறைப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பெறுவதற்கும் கல்வியறிவு அளிக்க, சுகாதார அமைச்சகத்துடன் கைகோர்த்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் செயல்பட வேண்டும்.

அதை விடுத்து 24 மணி நேர உணவகங்களை வைத்து அச்சங்கம் 
மலிவு விலை விளம்பரம் தேடக் கூடாது என்று சுரேஷ் வலியுறுத்தினார்.

உணவகத் தொழில் என்பது தனியாக செயல்படும் தொழில் அல்ல.

கடல் உணவு, காய்கறிகள், மளிகை, கோழி இறைச்சி விநியோகிப்பாளர்கள் உட்பட பலரை சார்ந்ததாகும்.

இவர்கள் அனைவரும்  உணவகங்களை தான் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ளன.

மேலும் உணவகங்களின் செயல்பாடுகளில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், 

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் என அனைத்து தொழில்களையும் பாதிக்கும்.

ஆகவே இந்த விவகாரத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சிந்தித்து பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் சுரேஷ் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset