நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

நாட்டில் ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 61ஆவது ஆண்டுக் கூட்டத்தைத் தலைமையேற்றுத் தொடக்கி வைத்தேன்.

முதல் அங்கமாகத் தமிழ்ச் சான்றோர்களின் பெயரில் தங்கப் பதக்கம் பெற்ற  விஜயராணி, பாவலர் கோவதன்,  குணசேகரன், செல்வன் இளமாறன் நால்வருக்கும் எனது வாழ்த்துகள்.

படைப்பாளர்கள் நிறைந்து இருக்கும் இந்த சபை காலத்தைக் கடந்து நிற்கும் படைப்புகளை உருவாக்க வேண்டும். 

குறிப்பாக நாட்டில் ஆய்வு ரீதியான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும். 

தொடர்ந்து தமிழ் இலக்கியப் பணியாற்றிக் கொண்டு வரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset