நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கப் புதிய தலைவராக ஆனந்தன், துணை தலைவராக டத்தோ கணேஷ் தேர்வு

கோலாலம்பூர்:

மலேசிய இந்தியக் குத்தகையாளர் சங்கத்தின் புதிய தலைவராக ஆனந்தன்  கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.

துணைத் தலைவராக டத்தோ கணேஷ் முரஜ் ராஜாமணி தேர்வு செய்யப்பட்டார்.

மலேசிய இந்தியக் குத்தகையாளர் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு இன்று பத்துகேவ்ஸ் ஷெங்கா மண்டபத்தில் நடைபெற்றது.

நடப்புத் தலைவர் டத்தோ ஜெனா இளம் தலைமுறையினருக்கு வழிவிட்டு தலைவர் பதவியைத் தக்காத்துக் கொள்ள போட்டியிடவில்லை.

இதனைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு நடப்பு பொருளாளர் ஆனந்தன், உதவித் தலைவர் சரவணன் ஆர்.டி. மணியம் ஆகியோர்  போட்டியிட்டனர்.

இதில் ஆனந்தன் 113 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சரவணனுக்கு 38 வாக்குகள் கிடைத்தன.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டத்தோ கணேஷ் முரஜ் 89 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  பார்த்திபன் 61 வாக்குகள் மட்டும் பெற்ற்றார்.

உதவித் தலைவர்களாக டத்தோ ஜாலாலூடின், சரவணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு பெற்றனர். 

செயலாளராக தயாளன், துணை செயலாளராக கே. சிவபாலன், பொருளாளராக தியாகராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

8 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு டத்தோ பாலகணேசன் பன்னீர் செல்வம், நவநீதன், பிரேம்குமார், விஸ்வநாதன் ஆவிலிங்கம், கோபி ராஜ், மோகன் கிருஷ்ணன், டத்தோ எம்.பி. நாதன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுகுமாறன் தேர்தல் குழுத் தலைவராக தேர்தலை  நடத்தி வைத்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset