நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்

கோலாலம்பூர்:

கோல குபு பாரு தேர்தலில் போது பிரதமருக்கு எதிராக சமூக மக்களை ஒரு சில தலைவர்கள் தூண்டி விடுகின்றனர்.

இது எனக்கு ஏமாற்றமளிக்கிறது என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.

சில தரப்பினர் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு மிகவும் ஆசைப்படுகிறார்கள்.

இதற்காக அவர்கள் வெறுப்பு அரசியலையும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தையும் கையில் எடுத்துள்ளனர்.

கோல குபு பாரு இடைத்தேர்தல் பிரச்சாரக் காலத்தில் சமூகத்தைத் தூண்டிவிட சில இந்தியத் தலைவர்கள் இத்தகைய தந்திரங்களைக் கையாண்டதால் தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாக அவர் கூறினார். 

நான் முன்பே சொன்னேன். மீண்டும் சொல்கிறேன். 

சம்பந்தப்பட்ட சில இந்தியத் தலைவர்கள் தஞ்சோங் ரம்புத்தானுக்கு சென்று தங்களைப் பரிசோதிக்க வேண்டும்.

அவ்வளவு நல்லவராக இருந்தால் ஏன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவில்லை?

புத்ராஜெயாவில் ஜோம் ஹோபோ கார்னிவல் நிகழ்வுக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக டத்தோஶ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இதை யாராலும் மறுக்க முடியாது என்று டத்தோ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset