நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேலையில்லா பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது: சிவநேசன் 

ஈப்போ:

நாட்டில் வேலையில்லா பிரச்சனைக்கு தீர்வு காண அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பேரா மாநில மனிதவள, சுகாதார துறைக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் இதனை கூறினார்

பேரா மாநிலத்தில் தொழில் துறைகள் வளரச்சிக் கண்டு வருவதால் எதிர்காலத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளது.

இதனால்  இளைஞர்கள்  இனியும் வேலை தேடி  வெளியிடங்களுக்கு செல்ல அவசியம. ஏற்படாது என்றார்.

பேரா மாநிலத்தில் வேலையில்லா பிரச்சனை தொடர்ந்து சரிவுக் கண்டு வருகிறது.

மேலும் வேலை தேடி வரும் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேலை வாய்ப்பு சந்தை வழி உதவிகளை அரசாங்கம் செய்தி வருகிறது.

வேலையில்லை என்று வீட்டில் முடங்கி கிடக்காமல் . இதுபோடன்ற நிகழ்வுகளில. கலந்துக்கொண்டு பயன் பெறுமாறு பேரா மாநில இந்திய விவகாரகளுக்கான தலைவருமான சிவநேசன் வலியுறுத்தினார்

பேரா சுங்கை சிப்புட்டில் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வேலை வாய்ப்பு சந்தையை தொடக்கி்வைத்த ஆற்றிய உரையில் இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியர்களும் பெரும் திரளானோர் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது.

பல நிறுவனங்கள் தொழிலாளர்கள் தேவையை எதிர்பார்க்கின்றனர். ஆகவே இதுபோன்ற நிகழ்வுளில் பங்கேற்று வாய்ப்புகளை பயன் படுத்திக்கொள்ளுமாறு சிவநேசன் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன், பேரா மாநில சொக்சோ இயக்குனர் பி.மோகனதாஸ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியின் உதவியோடு பேராக் சொக்சோ நிறுவனம், 17 நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து இந்த நிகழ்வு நடைபெற்றது.

இங்கு வருகையளித்த 17 நிறுவனங்கள் 5153 வேலை வாய்ப்புகளை இவ்வட்டார இளைஞர்களுக்கு தயார் செய்து வைத்துள்ளனர். நேர்முகப் பேட்டியுடன்  வேலை பெற்றதற்கான உறுதிக் கடிதமும் வழங்கப்பட்டது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset