நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7,500 அந்நிய தொழிலாளர் விவகாரத்தில் அரசு மௌனம் சாதிப்பது ஏன்?: நகை, பொற்கொல்லர் சங்கம் கேள்வி

கோலாலம்பூர்:

7,500 அந்நிய தொழிலாளர் விவகாரத்தில் அரசு மௌனம் சாதிப்பது ஏன் என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளான  7,500 அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

கடந்தாண்டு பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த வாக்குறுதி அளித்தார்.

பிரதமரின் இந்த வாக்குறுதி எங்களுக்கு பெரும் மன நிம்மதியை வழங்கியது.

ஆனால் இப்போது மூன்று தொழில் துறைகளுக்கான 7,500 அந்நிய தொழிலாளர்களில் இப்போது 300 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது

இதற்கு அந்நிய தொழிலாளர்களிக்கான விதிமுறைகளிள் உள்ள கெடுபுடிகள் தான் காரணமாக உள்ளது.

இதனால் இந்த விதிமுறைகளில் தளர்வு வேண்டும் என அரசாங்கத்திடம் தொடர்ந்து நாங்கள் கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.

ஆனால் இதற்கு இதனால் வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

இதனால் அந்நிய தொழிலாளர்கள் கிடைக்காததால் நாங்கள் எல்லாம் பரிதவிக்கிறோம்.

எங்களுக்கு உதவி செய்யப் போவது யார். பிரதமரின் வாக்குறுதியும் என்னவானது. இந்த வாக்குறுதி தொடர்பில் நாங்கள் யாரை சென்று பார்ப்பது.

இப்போதைய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா?

அல்லது உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் மேற்கொள்வாரா  என்பது தான் எங்களின் கேள்வியாகும்.

ஆகவே இந்த பிரச்சி னையில் பிரதமர் தலையிட்டு உரிய தீர்வை வழங்க என்று டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset