நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல், செல்சி வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல், செல்சி அணிகள் வெற்றி பெற்றன.

அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை முகமத் சாலா, ஆண்டி ரோபர்ட்சன், கோடி காப்கோ, ஹார்வே எலோய்ட் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிரிக்டோன் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset