நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூகுள் நிறுவனத்துடன் இணையவழி சந்திப்பு இன்று நடைபெறும்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா: 

தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுடன் இன்று இணையவழி சந்திப்பில் கலந்து கொள்வதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்த கூடுதல் விவரங்களைப் பிரதமர் வெளியிடவில்லை. 

வெளிநாட்டு முதலீட்டாளர்களை மலேசியாவில் முதலீடு செய்யும் நடவடிக்கைகளில் மலேசியத் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் பிரத்மர் அன்வார் குறிப்பிட்டார்.  

இப்போது பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவது தான் அவசியம் என்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதிலும் மலேசியா ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  

முன்னதாக, சமீபத்தில் மைக்ரோசாப்ட் மலேசியாவில் 10.5 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்ய விருப்பம் கொண்டிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset