நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் தொழிற்சாலைகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கு கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை அமல்படுத்தப்படும்: முஹம்மது ஃபஸ்லி

ஜொகூர் பாரு: 

ஜொகூர் சோதனைச் சாவடிகளில் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

இந்தப் புதிய குடிநுழைவு முறையை மலேசியாவின் குடிநுழைவுத்துறை நிர்வகிக்கும்.

சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல கடப்பிதழைக் காட்டுவதற்குப் பதிலாக சிங்கப்பூருக்கு வேலை நிமித்தம் பயணம் செய்யும் தொழிற்சாலை ஊழியர்கள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

இந்தப் புதிய திட்டத்துக்கு முன்னோட்டமாக, தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் மலேசியக் குடிநுழைவு அதிகாரிகள் ஏறி, ஸ்கேனர்களைப் பயன்படுத்தி ஊழியர்களின் கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யலாம்.

இந்தத் தகவலை நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் ஜொகூர் மாநிலப் பொதுப் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுவின் தலைவர் முஹம்மது ஃபஸ்லி முகம்மது சாலே தெரிவித்தார்.

வுட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனை சாவடிகள் வழியாகச் செல்லும் வாகனங்களுக்குக் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையைச் சிங்கப்பூர் கடந்த மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset