நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகன் மீதான விசாரணையை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விட்டு விடுகிறேன்: பெர்லிஸ் மந்திரி பெசார்

பெட்டாலிங் ஜெயா: 

போலி ஆவணங்கள் தயாரித்தது தொடர்பாகப் பெர்லிஸ் மந்திரி பெசாரின் மகன் இன்று காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி-யிடம் விட்டு விடுவதாக பெர்லிஸ் மந்திரி பெசார் ஷுக்ரி ரம்லி தெரிவித்துள்ளார். 

இந்த விசாரணையை எம்ஏசிசி-யின் வசம் விட்டு விடுகிறேன். அவர்களின் விசாரணையில் தலையிட மாட்டேன் என்று அவர் குறிப்பிட்டார். 

600,000 வெள்ளியை உள்ளடக்கிய உரிமைகோரல் ஆவணங்களைப் போலியாக தயாரித்தது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக எம்ஏசிசி அறுவரைத் தடுத்து வைத்துள்ள நிலையில் அந்த அறுவரில் பெர்லிஸ் மாநில மந்திரி பெசாரின் மகனும் அடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது. 

ஆதாரங்களை மேற்கோள் காட்டி, மந்திரி பெசார் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளுக்கு தடுப்புக் காவல் உத்தரவும் விதிக்கப்பட்டது.

இன்று காலை 8.45 மணியளவில் குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து நீதிபதி அனா ரொசானா முஹம்மத் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 முதல் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

2022-ஆம் ஆண்டு முதல் பெர்லிஸ் முழுவதும் பழுதுபார்ப்பு, பராமரிப்பு, பொருட்கள் மற்றும் சேவைகள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பான விசாரணையில் அவர்கள் உதவ வேண்டும் என்று கூறப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset