நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபஹ்மி மற்ற மாநில விவகாரங்களில் தலையிடாமல் தனது கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும்: சனுசி சாடல்

கோலாலம்பூர்: 

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் மற்ற மாநில விவகாரங்களில் மும்முரமாகச் செயல்படாமல் அமைதியாகத் தனது கடமைகளில் கவனம் செலுத்துமாறு கெடா மாநில மந்திரி பெசார் முஹம்மத் சனுசி அறிவுறுத்தியுள்ளார்.

கோலா குபு பாரு மாநிலச் சட்டமன்றத்தின் இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்து அமைதியாக இருக்கும்படி ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளரான ஃபஹ்மி அறிக்கை வெளியிடுவது பொருத்தமற்றது என்று அவர் கூறினார். 

தேர்தலில் ரகசியமாக இறங்கப் போவதில்லை. 7 மில்லியன் ரிங்கிட் வீடு இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியது உண்மையல்ல என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.

நேற்று தலைநகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தேசியக் கூட்டணி தேர்தல் ஆணையரிடம் அதிகம் பேச வேண்டாம் என்று ஃபஹ்மி அறிவுறுத்தினார்.

கெடாவில் அறிவிக்கப்பட்ட லங்காவியிலுள்ள கடல் அணைகளின் மேம்பாடு, விடாட் குழுமம் மற்றும் சுங்கை பட்டானி ரேஸ் டிராக் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் சனுசி மும்முரமாக இருக்க வேண்டும் என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset