நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலு சிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு; 245 பேருக்கு தரை வீடுகள்: அமைச்சர் ங்கா அறிவிப்பு

பெஸ்தாரி ஜெயா:

உலு சிலாங்கூரின் 5 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் எதிர் நோக்கி வந்த வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அத் தோட்டங்களைச் சேர்ந்த 245 பேருக்கு தரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவித்தார்.

உலுசிலாங்கூரில் உள்ள மேரி, நைகல் கார்னடர், புக்கிட் தாகார், சுங்கை திங்கி, மின்ஞாக் ஆகிய 5 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என தொடர்ந்து போராடி வந்தனர்.

குறிப்பாக நிலம் இருந்தும் அதில் அரசாங்கம் எங்களுக்கு வீடுகள் கட்டித் தரவில்லை என அவர்கள்  போராடி வந்ததனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட 5 தோட்ட மக்களுக்கு தரை வீடுகள் கட்டித் தரப்படும்.

மத்திய அரசாங்கம், வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு, மாநில அரசாங்கம், பெர்ஜாயா கோர்ப்பரேஷன் ஆகியவற்றின் ஒத்துழைப்பில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கமும் மாநில அரசாங்கமும் இந்த திட்டத்திற்காக 75 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

பெர்ஜாயா நிறுவனம் 20 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளது.

ஆக 5 தோட்டங்களைச் சேர்ந்த 245 பேருக்கு இங்கு தரை வீடுகள் கட்டித் தரப்படும்.

இந்த வீடமைப்பு திட்டம் அடுத்த 22 மாதங்களில் நிறைவு பெறும்.

பெஸ்தாரி ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ங்கா கோர் மிங் இதனை கூறினார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியின் நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset