நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய் மொழியில் புலமை குறைவால் கடப்பிதழ் விண்ணப்பங்கள் நிராகரிப்படுகின்றன? குடிநுழைவு துறை இயக்குநர் மறுப்பு 

ஜார்ஜ் டவுன்: 

மலாய் மொழியில் புலமை இல்லாததால் குடிநுழைவு அதிகாரி விண்ணப்பங்களை நிராகரிப்படுவதாக வெளிவந்த செய்தியைக் குடிநுழைவு துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ருஸ்லின் ஜூசோ மறுத்துள்ளார். 

தங்கள் கடமையின் ஒரு பகுதியாகக், குடிநுழைவு அதிகாரிகள் விண்ணப்பத்தை அங்கீகரிக்கும் முன் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சீரற்ற சோதனைகளை மேற்கொள்வார்கள் என்று ரஸ்லின் தெளிவுபடுத்தினார்.

இருப்பினும், இந்த மதிப்பாய்வு தொழில் ரீதியாகவும் விவேகமாகவும் செய்யப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு நல்ல சேவையை வழங்குவதற்கு இத்துறை உறுதி பூண்டுள்ளது.

குடிநுழைவு துறையால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின் படி பொதுமக்களை நடத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் எப்போதும் நினைவூட்டுகிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மலாய் மொழி மலேசியாவில் சரளமாகத் தெரியாததால், தனது தாயின் கடப்பிதழை புதுப்பிக்க முடியாமல் ஒரு நபர் ஏமாற்றமடைந்ததாக வெளியான செய்திகள் குறித்து ரஸ்லின் கருத்துத் தெரிவித்தார்.

ஒருவர் மலாய் மொழியில் தேர்ச்சி பெறத் தவறியதால், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

தங்கள் கடவுச்சீட்டைப் புதுப்பித்து, பினாங்கு யு.டி.சி அலுவலகத்தில் ஏப்ரல் 22-ஆம் அன்று பெற்றுக் கொள்ள முடியும்.

மலாய் மொழியில் சரளமாகப் பேசத் தெரியாத ஒரு வயதான பெண்மணிக்கு கோம்தாரிலுள்ள யு.டி.சி அலுவலகத்தில் கடப்பிதழைப் புதுப்பிக்க தடை விதிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

பின்னர் அந்த பெண்ணின் மகன் இது குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset