நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு இடைத்தேர்தல்: 642 காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர்: சசிகலா தேவி

ஷா ஆலம் :

சனிக்கிழமை தொடங்கும் கோல குபு பாரு மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மொத்தம் 642 காவல்துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர் என்று சிலாங்கூர் காவல்துறை துணைத் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி தெரிவித்தார். 

குறிப்பாக, வேட்பாளர் நியமனம் மற்றும் இடைத்தேர்தலுக்கு வாக்களிக்கும் நாளில் பாதுகாப்பு இருமடங்கு பலப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். 

அவர்கள் வாக்குச் சாவடிகள், வாக்களிக்கும் இடத்தைப் பாதுகாத்தல், வாக்கு எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் போன்ர நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவர்.

வாக்களிக்கும் நாளில் பாதுகாப்பு நிலைமைகள் சிறந்த மட்டத்தில் இருக்கும் என்று காவல்துறை உத்தரவாதம் அளிக்கின்றது. 

எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து எந்த வித சந்தேகமும் இன்றி வெளியே சென்று வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் இன்று சிலாங்கூர் காவல் படைத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பிரச்சாரம் முழுவதும், குறிப்பாக இடைத்தேர்தல் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய தகவல்களைத் தெரிவிக்க ஹுலு சிலாங்கூர் மாவட்டக் காவல்துறைத் தலைவர் போட்டியிடும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்துவார்.

இடைத்தேர்தல் செயல்முறை சுமூகமாக நடக்கும் வகையில் செயல்படுத்தப்படும் பிரச்சார அனுமதி விண்ணப்ப நடைமுறையும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

போட்டியிடும் கட்சிகள் இனம், மதம், ஆட்சியாளர் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset