நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடாளுமன்றச் செயற்குழு மூலம் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும்: பெர்சே வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா:

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையரை நாடாளுமன்றச் செயற்குழு நியமிக்க வேண்டும் என்று பெர்சே அழைப்பு விடுத்துள்ளது.

அடுத்த மாதம், மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் பதவி காலியாகவுள்ளது. 

தேர்தல் விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் மூலம் நியமனம் செய்வது அவசியமாகும். 

அவர்களால் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனநாயக ரீதியாக ஆராய முடியும்.

இந்த நியமனச் சீர்திருத்தம் அவசியமானது.

கூடுதலாக, அடுத்த தேர்தல் ஆணையத் தலைவர், தேர்தல் பகுதிகளின் மறுவரையறையை ஆய்வு செய்து செயல்படுத்தும் பொறுப்பைக் கொண்டிருப்பார்.

தற்போது அப்துல் கானி சாலே தேர்தல் ஆணையராகச் செயல்பட்டு வருகின்றார். 

அவர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், கடந்த 2003-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட தேர்தல் குற்றச் சட்டம் 1954 (AKPR) ஐ திருத்துமாறு பெர்சே அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டது.

ஊழல், தேர்தல் செலவு வரம்புகள் மற்றும் ஒவ்வொரு குற்றத்திற்கும் அபராதம் அதிகரிப்பு பற்றிய ஒரு பிரிவு இதில் அடங்கும்.

மேலும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப இந்தச் சட்டத்தை நவீனமயமாக்க புதிய விதிகளை சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

அதில் தேர்தல் பிரசாரங்களுக்கு அரசு வளங்களைப் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் பெர்சே தெரிவித்துள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset