நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ராயனைக் கொலை செய்த ஆடவரின் மரண தண்டனை 35 ஆண்டுகள் சிறை, 12 கசையடிக்கு மாற்றப்பட்டது

கோலாலம்பூர்: 

கடந்த 2018-ஆம் ஆண்டு தனது காதலரின் ஆறு வயது மகனைக் கொன்ற குற்றத்திற்காக விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகவும் 12 கசையடிகளாகவும் மாற்றியுள்ளது. 

டத்தோ ஹதாரியா சையட் இஸ்மாயில் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 

குற்றம் சாட்டப்பட்ட நோரைசுவான் ஹமாலிக்கு கங்கார் உயர்நீதிமன்றம் முன்பு தண்டனை வழங்கியதில் எந்த தவறும் இல்லை என்று நீதிபதிகளில் ஒருவரான அஸ்மி கூறினார்.

மேல்முறையீடு செய்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின்படி அந்த நபருக்கு எதிரான தண்டனை உறுதிசெய்யப்படுவது பாதுகாப்பானது என்றும் அவர் கூறினார்.

எனவே, தண்டனைக்கு எதிரான நோரைசுவானின் மேல்முறையீடு ஒரு மனதாக நிராகரிப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்தாண்டு ஜூலை 4-ஆம் தேதி முதல் கட்டாய மரண தண்டனை ஒழிப்புச் சட்டம் 2023 (சட்டம் 846) தண்டனை குறித்து பரிசீலிக்கலாம். 

அதே வேளையில் செய்த குற்றத்திற்கு தகுந்த தண்டனையை நிர்ணயிப்பதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 12 கசையடிகளுடன் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம்.

அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 12 கசையடிகள் அவருக்கு வழங்கப்படும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்பு வழங்கியுள்ளது. 

குற்றச்சாட்டின்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கும் மறுநாள் நள்ளிரவு 12.10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கங்கரின் கம்பங் ஜெஜாவியிலுள்ள ஒரு வீட்டில் முஹம்மது ராயான் ஹிதாயத் ஹைரில் கானைக் கொன்றதாக அந்நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் மீது பல காயங்கள் இருந்ததால் மரணத்திற்கு வழிவகுத்தது என்பதை ரோரைசுவான் விளக்கவில்லை என்று அஸ்மி கூறினார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த நபரே குற்றத்தைச் செய்தவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset