நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பயனீட்டாளர்கள் உள்ளூர் வெங்காயத்தை எளிதாகப் பெறுவதை ஃபாமா உறுதி செய்யும்

கோலாலம்பூர்:

கூட்டரசு விவசாயச் சந்தைபடுத்தல் வாரியம் (ஃபாமா) நாடு முழுவதுமுள்ள ஃபாமா மார்க்கெட்டிங் அவுட்லெட்டுகள் மூலம் உள்ளூர் வெங்காய விநியோகிப்பாளர்களைப் பயனீட்டாளர்கள் எளிதாகப் பெறுவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட பகுதிகளில் விளையும் உள்ளூர் வெங்காயத்தைச் சந்தைப்படுத்துவதை மையமாகக் கொண்ட ஒரு தலையீட்டுத் திட்டத்தில், மடானி வேளாண் விற்பனை உட்பட பல்வேறு திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று ஃபாமா இயக்குநர் அப்துல் ரஷீத் பஹ்ரி கூறினார். 

இந்த ஆரம்ப கட்டத்தில், நாடு முழுவதும் 5,000 இடங்களில் நடைபெறும் மடானி அக்ரோ விற்பனை திட்டத்துடன் இணைந்து மடானி கோம்போ விளம்பரம் மூலம் உள்ளூர் வெங்காய விற்பனையை ஃபாமா இலக்கு வைத்துள்ளது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கூடுதலாக, 416 ஃபாமா சந்தைப்படுத்தல் விற்பனை நிலையங்களும் பொருட்களின் விநியோகத்தைப் பெறுவதை உறுதிசெய்ய தயாராக உள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset