நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மே 10ஆம் தேதி அக்‌ஷயதிருதி நாள்; தங்கத்தை வாங்கி சேமியுங்கள்: மிக்ஜா

கோலாலம்பூர்:

இவ்வாண்டுக்கான அக்‌ஷயதிருதி வரும் மே 10ஆம் வெள்ளிக்கிழமை தேதி அனுசரிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் மக்கள் தங்கத்தை வாங்கி சேமிக்க வேண்டும் என்று மிக்ஜா எனப்படும் மலேசிய இந்திய பொற்கொல்லர், நகை வணிகர் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் கேட்டுக் கொண்டார்.

மே 10ஆம் தேதி காலை 9 மணிக்கு மறுநாள் காலை 7.30 வரை அக்‌ஷயதிருதி நடப்பில் இருக்கும்.

இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கி சேர்ப்பது பாரம்பரியமாக உள்ளது. 

இந்த நல்ல நேரத்தில் தங்கம் வாங்கினால் அது பல மடங்கு உயரம் தரும் என்பது ஐதீகமாகும்.

இந்த அக்‌ஷயதிருதியை முன்னிட்டு மலேசிய இந்திய நகை வணிகர்கள் பொற்கொல்லர்கள் உறுப்பினராக இருக்கும் நகை கடைகள் சிறப்பு சலுகைகளையும் வழங்க உள்ளன.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் நகைகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தங்க நகை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் தங்கம் வாங்குவது ஏற்புடைய நடவடிக்கையா என்று பலருக்கு கேள்விகள் எழும்.

ஒரு காலத்தில் இருந்ததைக் காட்டிலும் இப்போது அதன் விலை பல்மடங்கு உயர்ந்துள்ளது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

ஆகையால் வரும் காலங்களில் அந்த தங்கத்தின் விலை மேலும் உயருமே தவிர அது குறையாது.

ஆகவே மக்கள் தங்கத்தை வாங்கி சேமிப்பதில் தயக்கம் காட்டக் கூடாது என்று டத்தோ அப்துல் ரசூல் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset