நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொழிக்கும் இனத்திற்கும் மிகப் பெரிய பங்காற்றிய பேரியக்கம் தமிழ் இளைஞர் மணிமன்றம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

நாட்டில் மொழிக்கும் இனத்திற்கும் மிகப் பெரிய பங்காற்றிய பேரியக்கமாக மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றம் விளங்குகிறது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

கூட்டரசுப் பிரதேசம், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் முன்னாள் உறுப்பினர்கள் பேரவையின் ஏற்பாட்டிலான மூத்த மணிமன்ற மணிகளுக்குச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி.

எனது பொதுச்சேவை தொடங்கியது மணிமன்றத்தில் இருந்துதான்.  மணிமன்றத்தில்தான் தலைமைத்துவம் போதிக்கப்பட்டது. 

இன்றைக்கு நாட்டில் பல தலைவர்களை உருவாக்கிய பெருமை மணிமன்றத்தைச் சேரும்.  

அன்றைக்குப் பொது வாழ்க்கையில் தொண்டர்கள் அதிகம், தலைவர்கள் குறைவு. 

தாங்கிப் பிடிக்கத் தொண்டர்களும், வழிகாட்டத் தலைவர்களும் இருந்தார்கள். 

என் வழி(லி) அறியாதவனும், என் மொழி தெரியாதவனும் என்னை வழி நடத்த முடியாது.

 இன்று நமக்கு வழிகாட்டக் கூடிய தலைவர்கள் இல்லை. அரசியல் சூழல் மாறிக் கொண்டே இருக்கிறது. 

அந்த சவால்களை எதிர்கொள்வதற்கு இந்த சமுதாயம் தயாராக வேண்டும். தொண்டால் காலம் கடந்தும் வாழ்பவர்களே காலமானவர்கள். 

மொழிக்கும் இனத்திற்கும் மிகப் பெரிய பங்காற்றிய பேரியக்கம் தமிழ் இளைஞர் மணிமன்றம். 

அது மீண்டும் வலுப்பெற வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset