நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை

புத்ராஜெயா: 

இவ்வாண்டு அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படும் 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் என்று பிரதமர் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

மடானி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கூறு கட்சிகளும் இந்தச் சம்பள உயர்வுக்கு முழு ஆதரவை வழங்கியது.

இதனால் இந்தச் சம்பள உயர்வு திட்டத்தை டிசம்பர் 1-ஆம் தேதி செயல்படுத்தப்படும்.

சம்பள உயர்வை அரசு ஊழியர்கள். வரவேற்கிறார்கள். அதே சமயம், சில தரப்பு இதற்கு எதிர்மறையான கருத்துகளையும் வெளியிடுகின்றனர். 

நாடாளுமன்றத்தில் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளிப்படவில்லையென்றால் எவ்வாறு  இந்தச் சம்பள உயர்வு திட்டத்தை டிசம்பர் 1-ஆம் தேதி செயல்படுத்தப்படும் என்ற கேள்விகளையும் சில தரப்பினர் முன் வைத்தனர். 

மேலும், இந்தத் திட்டத்திற்கு எந்த நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார் என்பதை தாம் பார்க்க விரும்புவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset