நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு மே 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு?

ஷாஆலம்: 

உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு கானும் வகையில் மே 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளிவரும் என தகவல்கள் கூறுகிறது.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த தொகுதியில்  உள்ள லாடாங் மேரி, லாடாங் சுங்கை திங்கி, லாடாங் நிகல் கார்டென், லாடாங் மின்யாக், லாடாங் புக்கிட் திங்கி  தோட்டத்தினர் எதிர்நோக்கி வரும் பிரச்சினை பெரும் சர்ச்சையாகி உள்ளது.

குறிப்பாக இவர்களுக்கு வாக்குறுதி அளித்தப்படி வீடுகள் கட்டித் தரப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த பிரச்சினை பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதே வேளையில் இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, வீடமைப்பு ஊராட்சி அமைச்சர் ங்கா கோர் மிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.

இதன் அடிப்படையில் இந்த வீடியோவை பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகிறது.

குறிப்பாக 20 ஏக்கர் நிலத்தில் 245 வீடுகள் கட்டுவதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்த அறிவிப்பு தான் வரும் மே 9ஆம் தேதி வெளியிடப்படும்.

கோல சிலாங்கூரில் முக்கிய தலைவர்களால் இந்த அறிவிப்பு வரும் என தகவல்கள் கூறுகின்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset