நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியக் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான இடைக்கால அறிக்கை அடுத்த வாரம் நிறைவடையும்: காலிட் நோர்டின்

மலாக்கா:

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பேராக் லுமுட்டில் மலேசியக் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து குறித்த இடைக்கால அறிக்கை அடுத்த வாரம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தற்காப்பு துறை அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்தார். 

இதற்கு முன் நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்தை உட்படுத்தியே இந்த விசாரணை நடந்து வருகின்றது. 

தற்போது விசாரணைக் குழு ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான இடைக்கால அறிக்கையைத் தயாரித்து வருகிறது என்றும் முன்பு தெரிவித்தது போல் இரு வாரங்கள் அந்த அறிக்கை தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.

இறைவன் நாடினால் அடுத்த வாரம் இடைக்கால அறிக்கை வெளியிடப்படும்.

சம்பவத்தின் உண்மையான காரணங்களை அறிய  30 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்படும் என்பதையும் காலிட் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, ஏப்ரல் 23-ஆம் தேதி லுமுட்டில் மலேசிய கடற்படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துள்ளானதில் அதில் பயணித்த 10 உறுப்பினர்கள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset