நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியை காட்ட கோல குபு பாரு இடைத் தேர்தல் இடமில்லை: டத்தோஸ்ரீ சரவணன்

ராசா:

அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியை காட்ட கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் இடமில்லை.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

வெளியே உள்ள ஒரு சிலர் கோல குபு பாரு இடைத் தேர்தலை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என கூறுகின்றனர்.

தேர்தலை புறக்கணித்தால் வெற்றி பெற்றவரும் நம்மை மதிக்க மாட்டார். தோல்வி கண்டவரும் நம்மை மதிக்க மாட்டார்.

இறுதியில் இங்குள்ள இந்திய சமூகம் தான் இன்னல்களை எதிர்நோக்குவார்கள்.

அரசாங்கத்தின் மீது பலருக்கு அதிருப்திகள் இருக்கும். அதை யாராலும் மறுக்க முடியாது.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவியேற்பதற்கு மஇகாவும் ஒரு காரணம். ஆனால் அதன் பின் மஇகாவுக்கு எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை.

அதனால் எங்களுக்கும் அதிருப்தி உள்ளது. ஆனால் சமுதாயத்தின் நலன் கருதி ஒற்றுமை அரசுக்கு மஇகா ஆதரவு தந்து வருகிறது.

ஆகவே அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்த கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் இடமில்லை.

அதன் பின் 16ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும். அப்போது தான் நமது கோபத்தையும் சக்தியையும் காட்ட வேண்டும்.

அதே வேளையில் மத்தியிலும் மாநிலத்திலும் குறிப்பாக ஒரே கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்தால் அனைவருக்கும் சிறப்பு.

உலு சிலாங்கூர் ராசாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ சரவணன் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset