நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

104 வருடம் பழமை வாய்ந்த கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி பாதுக்காக்கப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ வான் அஜிசா

கெர்லிங்:

104 வருடம் பழமை வாய்ந்த கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி பாதுக்காக்கப்பட வேண்டும்.

பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வான் அஜிசா இதனை கூறினார்.

கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்டது மகிழ்ச்சி.

பள்ளியின் தலைமையாசிரியர் கலைவாணர் தலைமையிலான ஆசிரியர் குழு பள்ளி குறித்து உரிய விளக்கம் தந்தனர்.

இப்பள்ளி 104 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கூறப்பட்டது. இதுபோன்ற தமிழ்ப்பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதே வேளையில் இப்பள்ளியின் எதிர்காலம் குறித்து முறையாக சிந்தத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதில் பள்ளி மற்றும் அதில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியம். 

கோல குபு பாரு இடைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நேரத்தில் இங்கு எதுவும் அறிவிக்க முடியாது. அப்படி அறிவித்தாலும் அது தவறாகி விடும்.

எது எப்படி இருந்தாலும் தமிழ்க் கல்வி, தமிழ்ப்பள்ளி நலனை மடானி அரசு பாதுகாக்கும் என்று டத்தோஸ்ரீ வான் அஜிசா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset