நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல் பார்வையுடன் பார்த்தால் அரசின் எல்லாத் திட்டமும் தவறாக தான் இருக்கும்: டத்தோ ரமணன்

கோல குபு பாரு:

அரசியல் பார்வையுடன் பார்த்தால் அரசாங்கத்தின் எல்லாத் திட்டமும் தவறாக தான் இருக்கும்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுத் துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.

டத்தோஸ்ரீ தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

இருந்தாலும் இந்திய சமூகத்திற்கு இந்த அரசாங்கம் எதையும் செய்யவில்லை.

தொடர்ந்து ஓரங்கட்டி வருகிறது என ஒரு சில தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஏன் அமானா இக்தியாரின் பெண் திட்டத்தை கூட குறை கூறுகின்றனர். அது கடன் தான். உதவி இல்லை என்கிறார்கள்.

ஆனால் அமானா இக்தியாரின் திட்டங்களின் வாயிலாக பல இந்திய பெண்கள் வாழ்க்கையில் முன்னேறியுள்ளனர்.

இது ஏன் அவர்கள் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள் என்பது தான் என்னுடைய கேள்வி.ஆகவே இந்த விவகாரத்தில் குறை சொல்பவர்கள் குறை சொல்லி கொண்டே இருக்கட்டும்.

அதை கருத்தில் கொள்ளாமல் இந்திய சமுதாயத்திற்கு உரிய திட்டங்களை இந்த அரசாங்கம் செய்யும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

அமானா இக்தியாரின் அங்கத்திருடனான சிறப்பு சந்திப்பு கூட்டத்தில் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வான் அஜிசா கலந்துக் கொண்டார்.

அவரிடம் அமானா இக்தியாரின் பெண் திட்டம் குறித்து முழுமையாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அவரும் இந்த திட்டத்திற்கு முழு ஆதரவுடன் பாராட்டுகளை தெரிவித்தார் என்று டத்தோ ரமணன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset