நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்று  நண்பர், இன்று எதிரி; கோல குபு பாருவில் இந்தியர்களின் வாக்குகளை கைப்பற்றுவோம்: டத்தோஸ்ரீ வான் அஜிசா

அந்தாரா காப்பி: 

அன்று  நண்பர், இன்று எதிரி. அதை எல்லாம் பொறுப்படுத்தாமல் கோல குபு பாருவில் இந்தியர்களின் வாக்குகளை கைப்பற்றுவோம்.

பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வான் அஜிசா கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு தற்போது அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.

டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசு மீது பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

குறிப்பாக நமக்கு நண்பர்களாக இருந்த பலர் தற்போது எதிராக நின்று பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் அல்லது அதிருப்தி இருந்தால் அதை தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அதை விடுத்து எதிரணியில் நின்று கொண்டு நம்மை சாடுவது தேவையில்லாத ஒன்று.

எது எப்படி இருந்தாலும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியர்கள் வாக்குகள் மிக முக்கியமான ஒன்றாகும்.

அந்த வாக்குகள் நம்பிக்கை கூட்டணிக்கு கிடைப்பதை கெஅடிலன் கட்சியின் தொகுதி, கிராம தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்.

மேலும் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் நம்பிக்கை கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைக்கும்படி
 என்று டத்தோஸ்ரீ வான் அஜிசா கேட்டுக் கொண்டார்.

கோல குபு பாருவுக்கு வருகை தந்த டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா, சிலாங்கூர் மாநில கெஅடிலான் தொகுதி இந்திய தலைவர்கள் மற்றும் கிராம தலைவர்களை சந்தித்து உரையாடினார்.

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலவரங்கள் குறித்து உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் அவருக்கு விளக்கம் அளித்தார்.

இந்த சந்திப்பு கூட்டத்தில் செந்தோசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்  உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset