நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரச்சாரத்தில் இன, சமய விவகாரங்கள் பயன்படுத்தும் இக்கட்டான நிலையில் தேசியக் கூட்டணியுள்ளது: ஃபாஹ்மி ஃபாட்சில்

புத்ராஜெயா:

வாக்காளர்களிடம் முன்வைப்பதற்கு ஆக்ககரமான கருத்துகள் இல்லாத நிலையில் கோல குபு பாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தேசியக் கூட்டணி தாய் மொழிப் பள்ளிகள் உட்பட இன மற்றும் சமய விவகாரங்கள் குறித்து பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பட்சில் தெரிவித்தார். 

இந்த நடவடிக்கையானது தங்களைத் தாங்களே படுகுழியில் தள்ளிக் கொள்வதற்கு சமம் என்றும் ஃபாஹ்மி குறிப்பிட்டார். 

இதனால், தேர்தல் பிரசாரத்தின் போது இனவாத விவகாரங்களை எழுப்புவதைத் தேசியக் கூட்டணியின் தேர்தல் கேந்திரம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் பேரப்பிள்ளைகளே சீனப்பள்ளியில் பயில்வதையும் ஃபாஹ்மி சுட்டிக் காட்டினார்.

இந்நாட்டு மக்கள் மிதவாதப் போக்கை கடைபிடிக்கின்றனர். தாய்மொழி பள்ளிகள் உள்பட இன விவகாரத்தை அரசியல் கட்சிகள் எழுப்புவது முதிர்ச்சியற்ற செயலாகும் என அவர்  கூறினார்.

கோல குபு பாரு இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஐந்தாவது நாளை எட்டிய போதிலும் தேசியக் கூட்டணி இன்னும் குழப்ப நிலையில் தான் உள்ளது. 

தேசியக் கூட்டணிக்கு எதிராக புறக்கணிப்பு நடவடிக்கையில் பாஸ் கட்சியினர் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset