நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பதவிக்காக உறவை முறித்துக் கொள்ள விரும்பவில்லை; மஇகா உதவித் தலைவர் பதவியை தற்காப்பேன்: டத்தோ டி. மோகன்

கோலாலம்பூர்:

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோருடனான உறவை பதவிக்காக முறித்துக் கொள்ள விரும்பவில்லை.

மஇகா உதவித் தலைவர் பதவியை தற்காப்பேன் என்று டத்தோ டி. மோகன் அறிவித்தார்.

மஇகா உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட உள்ளேன் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக ஒரு சிலர் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும்.

என்னை பொருத்த வரையில் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோருடன் நல்ல  உறவு உள்ளது.

இந்த உறவை பதவிக்காக முறித்துக் கொள்ள மாட்டேன். 

ஆகையால் நான் வகிக்கும் உதவித் தலைவர்  பதவியை தற்காக்க வேண்டும் என்பது தான் எனது இலக்கு.

மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் டத்தோ மோகன்  இதனை தெரிவித்தார்.

இதனிடையே கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பானுக்கு இந்திய வாக்காளர்களின் ஆதரவு குறையலாம் என்று டத்தோ டி. மோகன் கூறுகிறார்

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் இந்திய சமுதாயத்திற்கு இதை செய்வோம் அதை செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார்கள்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களுக்கு இந்திய சமுதாயம் மிகப்பெரிய ஆதரவை வழங்கியது.

ஆனால் இன்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு என்ன செய்தது என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தால் மட்டும் போதாது. இந்திய சமுதாயத்திற்கு உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்றார் அவர்.

ஆட்சிக்கு வந்து இதுநாள் வரை செராண்டா தமிழ்ப் பள்ளிக்கு ஒரு சொங்கல் கல்லை கூட கட்டவில்லை.

நம்பிக்கை கூட்டணியில் உள்ள இந்திய தலைவர்கள் எதையும் பேச மாட்டார்கள். 

இந்திய சமுதாயத்திற்காக ம இகா தலைவர்கள் குரல் கொடுப்பார்கள் என்று டத்தோ மோகன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset