நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 10.5 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யவுள்ளது: அனைத்துலக வாணிபம் & தொழில்துறையமைச்சு அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா: 

மைக்ரோசாப்ட் நிறுவனம் நான்கு ஆண்டுகளில் மலேசியாவில் கிளவுட் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் 10.5 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யும் என்று அனைத்துலக வாணிபம் & தொழில்துறை அமைச்சகம், மிட்டி தெரிவித்துள்ளது.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்தின் போது மைக்ரோசாப்ட் தலைமை செயல்முறை அதிகாரி சத்யா நாடெல்லா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

300,000 மலேசியர்களுக்கு பயிற்சி அளிப்பதையும், புதுமையான அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதையும் மைக்ரோசாப் தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளதை சத்யா ஒப்புக் கொண்டார். 

உலகளவில் மலேசியாவை முன்னணி இலக்கவியல் மையமாக மாற்றுவோம் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset