நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7,500 அந்நியத் தொழிலாளர் விவகாரம்; பிரதமரை சந்திப்பேன்: சிவக்குமார்

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள இந்திய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்க போராடுவேன் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் அறிவித்தார்.

நான் மனிதவள அமைச்சராக இருந்த போது அமைச்சரவையில் பேசி 7,500 அந்நியத் தொழிலாளர்களை பெற்றுத் தந்தேன்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களும்  இதற்கு முழு ஆதரவு வழங்கினார்.

ஆனால் இன்று வெறும் 300 அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே கிடைத்திருக்கிறார்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவையில் 7,500 பேர் அங்கீகரிக்கப்பட்டது.

அப்படி இருந்தும்  வெறும் 300 பேர் மட்டுமே கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது என்றால் அது பிரதமருக்கு தெரியாமல்கூட இருக்கலாம்.

இந்திய தொழில் துறைகளுக்கு 7 500 பேரை நீங்கள் தான் பெற்றுத் தந்தீர்கள்.

ஆகவே நீங்களே முயற்சி எடுத்து இதற்கு தீர்வு காணுங்கள் என்று மூன்று இந்திய பாரம்பரிய தொழில் சங்கங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.

இது தொடர்பாக பிரதமருக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டேன். விரைவில் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறேன்.

பிரதமரை சந்திக்கும் போது இதற்கு முழு தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

இன்று கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset