நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்கள் துணையமைச்சர் சரஸ்வதியை சந்தித்தனர்

புத்ராஜெயா:

மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் சரஸ்வதியை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் மலேசிய இந்து சங்கம் மட்டுமல்ல இந்து சமயமும் மலேசிய வாழ் இந்துப் பெருமக்களும் எதிர்கொள்ளும் பல்வேறு சங்கடங்கள், வழிபாட்டு தலங்களின் நீண்ட கால சிக்கல் உட்பட பல்வேறு பிரச்சினை குறித்து துணை அமைச்சருடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் மலேசிய இந்து சங்க மறுமலர்ச்சி குறித்து சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் இந்து சங்க தேசியத் தலைவர் தங்க கணேசன் தெரிவித்தார்.

ஆலயங்களில் நிலப் பிரச்சினை தொடர்ந்து பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

இந்தச் சிக்கலுக்கு அரசாங்க மட்டத்தில் பேசி தீர்க்கமான முடிவெடுக்க துணை நல்கும்படி துணை அமைச்சரின் உதவி நாடப்பட்டது.

மேலும் நாட்டில் ஏறக்குறைய 160 வழிபாட்டு தலங்கள் திவால் நிலைக்கு ஆளாகியுள்ளதும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப் பட்டது.

அவற்றின் மீட்சிக்கு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டதுடன் இதன் தொடர்பில் ஒருமைப்பாட்டு அமைச்சின் சார்பில் உதவும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேவேளையில் இந்த விவகாரங்கள் குறித்து மலேசிய இந்து சங்கம் பிரதமரின் கவனத்திற்கும் உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கும் கொண்டு செல்வது குறித்தும் துணை அமைச்சர் செனட்டர்  சரஸ்வதியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset