நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரே நாளில் 5 முறை வெடித்து சிதறிய எரிமலை: பேரிடரால் அல்லாடும் இந்தோனேசியா

ஜாகர்த்தா:

இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜாவா தீவில் சுமார் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநாடுக்கத்தினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கினார்கள். மேலும், அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்தார்கள். 

இந்நிலையில், வடக்கு சுலவேசி பகுதியில் இருக்கும் ருவாங் தீவு எரிமலை வெடித்து சிதறியிருக்கிறது.

24 மணி நேரத்தில் ஐந்து முறை இந்த எரிமலை சிதறியதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்து இருக்கிறது. 

மேலும், இந்த எரிமலை வெடித்ததில் சிதறிய தீக்குழம்பு வானை நோக்கி சுமார் 3 கி.மீ. சென்றதாகவும் கூறபட்டு இருக்கிறது.

எரிமலை வெடித்து சிதறியதும் அப்பகுதியில் இருந்த 800 பேர் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டனர். 

மேலும், வெடித்து சிதறிய எரிமலையை சுற்றியுள்ள 6 கி. மீ தொலைவில் யாரும் இருக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். 

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset