நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னருக்கு எதிராக அவதூறு பதிவை வெளியிட்ட பாபாகோமோ குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

கோலாலம்பூர்:

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில், எரிச்சலூட்டும் பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் பிரபல வலைப்பதிவு எழுத்தாளர் பாபாகோமோ என்றழைக்கப்படும் வான் முஹம்மத் அஸ்ரி வான் டெரிஸ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.  

நீதிபதி சித்தி அமினா கசாலி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் அவர் தான் குற்றமற்றவர் என்றார். 

கடந்த திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில்  தனது எக்ஸ் தளத்தில் கேகே சூப்பர் மார்ட் நிறுவனர் சாய் கீ கான் சுல்தான் இப்ராஹிமிடம் பேசியது தொடர்பான எரிச்சலூட்டும் பதிவுகளை வெளியிட்டதாகப் பாபாகோமோ மீது குற்றம் சாட்டபட்டது.

தேச நிந்தனை சட்டம் 1948 இன் பத்தி 4(1)(c) இன் படி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது 

குற்றம் நிருப்பிக்கப்பட்டால் அதே சட்டத்தின் உட்பிரிவு 4(1) இன் கீழ் RM5,000 க்கு மிகாமல் அபராதம் அல்லது அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். 

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு துணை வழக்கறிஞர் கைருல் அஸ்ரீம் மாமத் பரிந்துரைக்கவில்லை.

கடந்த செவ்வாய்கிழமை, வான் அஸ்ரி இரண்டு நிமிட, 46 வினாடிகள் கொண்ட வீடியோ மூலம் மாமன்னரை அவமானப்படுத்திய ஓர் அறிக்கை தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

இது ஏப்ரல் 3-ஆம் தேதி சாயின் இருப்பை ஏற்றுக் கொண்ட சுல்தான் இப்ராஹிமின் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கியது.

15 நிமிட நேருக்கு நேர் அமர்வில் சாய், சுல்தான் இப்ராஹிம் மற்றும் அனைத்து முஸ்லிம்களிடமும் அல்லாஹ் என்ற வாசகம் எழுதப்பட்ட காலுறைகளை விற்கும் பிரச்சனை தொடர்பாக மன்னிப்பு கோரினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset