நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ணம்: லிவர்பூல் வெளியேறியது

லண்டன்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் தோல்வி கண்டு வெளியேறி உள்ளனர்.

ஜெவிஸ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் அட்லாண்டா அணியை சந்தித்து விளையாடினர்.

இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அல்டாண்டா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஆனால் இரு ஆட்டங்களின் முடிவில் லிவர்பூல் அணியினர் 1-3 என்ற மொத்த கோல் கணக்கில் அட்லாண்டா அணியிடம் தோல்வி கண்டனர்.

இதனைத் தொடர்ந்து அட்லாண்டா அணியினர்  ஐரோப்பா லீக் கிண்ண அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.

லிவர்பூல் அணியினர் போட்டியில் இருந்து வெளியேறினர்.

மற்ற ஆட்டங்களில் ஏஎஸ் ரோமா, மார்செலே, பாயர் லெவர்குசன் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset