நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரா தொழில்நுட்பப் பல்கலைகழகத்தின் இருதய அறுவை சிகிச்சை முதுகலை கல்வியைப் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்படவில்லை: ஸம்ரி அப்துல் காடிர் 

பெட்டாலிங் ஜெயா: 

மாரா தொழில்நுட்பப் பல்கலைகழகத்தின் இருதய அறுவை சிகிச்சை முதுகலை கல்வி திட்டத்தைப் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு விரிவுபடுத்தும் திட்டம் குறித்து இதுவரை விவாதிக்கப்படவில்லை என்று உயர்க்கல்வி அமைச்சர் ஸம்ரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார். 

பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு மாரா தொழில்நுட்பப் பல்கலைகழகத்தில் ஏற்றுக் கொள்ளும் முன்மொழிவு பரிசீலிக்கப்படுவதற்கு முன்னர் பல அடிப்படை விடயங்கள் வலியுறுத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். 

இந்த முன்மொழிவு குறித்து உத்தியோகபூர்வமாக இன்னும் விவாதிக்கவில்லை என்றார் அவர். 

முன்மொழிவு பற்றி விவாதிப்பதற்கு முன் சில அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதுதான் முதலில் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, இருதய அறுவை சிகிச்சை முதுகலை கல்வி திட்டத்தைப் பூமிபுத்ரா அல்லாத பயிற்சி மருத்துவர்களுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தைப் பரிசீலிப்பதாக மாரா தொழில்நுட்பப் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. 

தேசிய அறுவை சிகிச்சை மையம் 'பேரலல் பாத்வே' இருதய அறுவை சிகிச்சை பயிற்சித் திட்டம் மட்டுமே நாட்டில் வழங்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த முன்மொழிவு செய்யப்பட்டது.

இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த 2020-ஆம் ஆண்டில் மலேசிய தகுதி முகமையிடமிருந்து தற்காலிக அங்கீகாரத்தை மாரா தொழில்நுட்பப் பல்கலைகழகம் பெற்றது.

கடந்த மாதம், சுகாதார அமைச்சகம், இணையான பாதை திட்டம் அங்கீகரிக்கப்படும் என்று அறிவித்தது.

மேலும் அந்த நோக்கத்திற்காக மருத்துவச் சட்டம் 1971 (சட்டம் 50) திருத்தத்தை அமைச்சரவை விரைவுபடுத்த பரிந்துரைத்தது.

முன்னதாக, உயர்கல்வி அமைச்சகம் சுகாதார அமைச்சகம் மருத்துவ நிபுணர்களுக்கான பிபிபி சிக்கலைத் தீர்க்க ஒப்புக்கொண்டன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset