நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரேபிட் கேஎல் இலகு இரயிலில் பயணக் கட்டணத்திற்கு கிரெடிட், டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தலாம்

பெட்டாலிங் ஜெயா: 
 
பொது மக்கள் இனி கிரெடிட், டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி ரேபிட் கேஎல் இலகு இரயிலில் பயணம் செய்யலாம் என்று ரேபிட் கேஎல் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பயணிகள் இந்த புதிய சேவையை நேற்று முதல் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

பயணச்சீட்டு வாங்கும் முறையைத் தொடர்ந்து மேம்படுத்தவும், பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும் ரேபிட் ரெயில் உறுதி பூண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் எல்ஆர்டி,எம்ஆர்டி, மோனோ ரயில் மற்றும் பிஆர்டி சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் இப்போது டோக்கன்களை வாங்குதல், டச் என் கோ கார்டுகளைப் பயன்படுத்துதல், மை50 அல்லது மைசிட்டி பயண பாஸ்களுக்கு சந்தா செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம். 

இந்தப் புதியக் கட்டணச் சேவையின் மூலம் பயனர்கள் பணத்தை எடுத்துச் செல்வது பற்றியோ அல்லது தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தைத் தேடுவது பற்றியோ இனி கவலைப்படத் தேவையில்லை.

இந்தக் கட்டண முறை பாசார் செனி ஹப் மற்றும் கான்லே எம்ஆர்டி நிலையத்தில் உள்ள ரேபிட் கேஎல் சலுகை அட்டை பதிவு முகப்பிடத்தில் பெறலாம் என்று அந்நிறுவனம் அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset