நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலேசிய ரசிகர்களை வசீகரிக்கப் போகும் ஏஆர் ரஹ்மானின் கண்கவர் இசை நிகழ்ச்சி 

கோலாலம்பூர்:

ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் பங்கேற்கும் உலகத் தரம் வாய்ந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஜூலை 27-ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. 

மலேசியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான ஸ்டார் பிளானெட் பெருமையுடன் வழங்கும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி இரவு 8 மணியளவில் நடைபெறவிருப்பதாக இன்று லீ மெரிடியனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்டார் பிளானட்டின் நிர்வாகம் தெரிவித்தது. 

ஸ்டார் பிளானட்டின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஆலன் ஃபூ மற்றும் ஸ்டார் பிளானட்டின் இயக்குநர் டத்தோ ஆர். ராஜேந்திரன் ஆகியோர் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கலைப் பார்வையைக் குறைபாடற்ற முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்து பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இசைத்துறையின் அடையாளமாக விளங்கும் ஏஆர் ரஹ்மானை மலேசியாவிற்கு அழைத்து வருவதில் தனது நிர்வாகம் மகிழ்ச்சியடைவதாக ஸ்டார் பிளானட்டின் நிர்வாக இயக்குனர் டத்தோ ஆலன் ஃபூ கூறினார். 

மலேசியப் பார்வையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதற்கான தங்கள் பணியைத் தொடரும் இந்த இசை நிகழ்ச்சி ஸ்டார் பிளானட்டின் குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பிரதிபலிக்கிறது. 

ரஹ்மானின் இசை எல்லைகளைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைப் பேசுகிறது. மேலும் ரசிகர்கள் ஏஆர் ரஹ்மானின் பிரம்மாண்ட படைப்புகளை நேரலையில் காணும் இந்த அரிய வாய்ப்பை ரசிகர்களுக்கு வழங்குவதில் பெருமைபடுவதாகவும் அவர் கூறினார். 
 
ஸ்டார் பிளானட் ஏற்பாடு செய்துள்ள ஏஆர் ரஹ்மான் லைவ் இன் கோலாலம்பூர் 2024 இசை நிகழ்ச்சியானது, புதிய இசையமைப்புடன் ரஹ்மானின் பிரசித்திப் பெற்ற தனித்துவமான வெற்றிப் பாடல்களை உள்ளடக்கிய நட்சத்திரக் கலைஞர்களால் உயிரூட்டப்பட்ட இசை வகைகளின் அற்புதமான கலவையைக் காண்பிக்கும் இந்திய சினிமாவில் ரஹ்மானின் புகழ்பெற்ற பாடல்கள் மற்றும் பிரியமான பாடல்களின் புதிய விளக்கங்கள், முக்கியமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மெல்லிசைகள் உட்பட ஒரு கவர்ச்சியான செவிவழி அனுபவத்தைப் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம் என ஸ்டார் பிளானட்டின் இயக்குநர் டத்தோ ஆர். ராஜேந்திரன் தெரிவித்தார். 

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் எதிர்வரும் 8 மே 2024 மதியம் 2:00 மணி தொடங்கி my.bookmyshow.com மற்றும் ticket2U.com.my வழியாகப் பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் தகவல் மற்றும் டிக்கெட் விவரங்களுக்கு, www.starplanet.com.my ஐப் பார்வையிடலாம். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset