நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி 

சென்னை: 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், 2000 - 2006-ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உப தலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாக வழங்கினார்.

அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார வாழ்த்து கூறி, நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset