நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கிரிஷ் லைவ் இன் மலேசியா இசை நிகழ்ச்சியில்  உள்ளூர் பாடகர்களுக்கும் வாய்ப்பு: கிரிஷ்

கோலாலம்பூர்: 

கிரிஷ் லைப் இன் மலேசியா இசை நிகழ்ச்சியில் உள்ளூர் பாடகர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

இதனை பாடகர் கிரிஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதி செய்தார்.

என் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஹரே கிருஷ்ணா உரிமையாளர்   ஹரேகிருஷ்ணா பத்துமலை மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.

அவரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக இது அமையும்.

அதே வேளையில் பல பணிகளுக்கு மத்தியில் டத்தோஸ்ரீ சரவணன் இங்கு வந்து ஆதரவு தந்துள்ளார்.

இவ்வேளையில் அவருக்கும் எனது நன்றி என்று பாடகர் கிரிஷ் கூறினார்.

இசை நிகழ்ச்சி என்றாலே நிச்சயம் பாடகர்கள் பட்டியல் இருக்கும். பல நிகழ்ச்சிகளின் பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றிருந்தது.

வகையில் எனது தலைமையில் நான் இசை நிகழ்ச்சியில் நிச்சயம் சிறந்த பாடகர்கள் இடம் பெறுவார்கள்.

குறிப்பாக மலேசியாவைச் சேர்ந்த பாடகர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.அதில் நான் உறுதியாக உள்ளேன் என்று பாடகர் கிரிஷ் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset